எங்கள் நோக்கம்

சாப்பாடு, தூக்கம், படிப்பு, screen time போன்ற தினசரி பழக்கங்களைப் பற்றி பேசுவது சில நேரங்களில் பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் சிரமமாக இருக்கலாம். அந்த உரையாடலை மென்மையாகத் தொடங்க உதவும் ஒரு playful fictional character ஆக பூச்சாண்டி உருவாக்கப்பட்டது.

வீடியோக்கள் scary அல்லது funny tone-ல் இருக்கலாம். இவை பெற்றோர்களுக்காக உருவாக்கப்படும் கற்பனை பொழுதுபோக்கு வீடியோக்கள். குழந்தைகளை பயமுறுத்துவது எங்கள் நோக்கம் அல்ல; நல்ல பழக்கங்களை வேடிக்கையான உரையாடல் மூலம் ஊக்குவிப்பதே எங்கள் நோக்கம்.

உங்கள் குழந்தை இதைப் பார்த்து பயப்படக்கூடும் என்று நினைத்தால், வீடியோவைக் காட்ட வேண்டாம். பெற்றோர் குழந்தையுடன் சேர்ந்து பார்த்து, அதன் பிறகு நல்ல பழக்கங்களைப் பற்றி அமைதியாகப் பேசுவதுதான் சரியான பயன்பாடு.

Free மற்றும் personalized videos

Free requests அனைத்தும் தேர்வு செய்யப்படும் என்று உத்தரவாதம் இல்லை. தேர்வு செய்யப்பட்ட free video Instagram-ல் பொதுவாகப் பதிவிடப்படலாம்; அதற்காக form-ல் தனியான consent பெறப்படுகிறது. Personalized video பற்றிய தகவலுக்கு Instagram DM மூலம் தொடர்புகொள்ளலாம்.

குழந்தைகளின் தனியுரிமை

குழந்தையின் first name அல்லது nickname மற்றும் பேச வேண்டிய habit மட்டுமே கேட்கிறோம். Photo, school name, address, phone number, medical details போன்ற sensitive தகவல்களை அனுப்ப வேண்டாம். முழு request விவரங்கள் website-ல் பொதுவாக காட்டப்படாது.

AI-assisted creative work

பூச்சாண்டி ஒரு AI-generated fictional character. Scripts, visuals மற்றும் editing மனித creative direction உடன் உருவாக்கப்படுகின்றன. இந்த உள்ளடக்கம் parenting, medical அல்லது psychological professional advice-க்கு மாற்றாகாது.